காஞ்சிபுரம் பீமேஸ்வரர் கோவிலில், 108 சங்கு அபிஷேகம்
ADDED :2253 days ago
காஞ்சிபுரம்:விஷார் கிராமத்தில் உள்ள பீமேஸ்வரர் கோவிலில், சிவ வேள்வியுடன், சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது.
காஞ்சிபுரத்தில் உள்ள பீமேஸ்வரர் சிவனடியார் குழு சார்பில், மாதந்தோறும் சிவாலயங்களில் திருவாசகம் முற்றோதல் மற்றும் சிவவேள்வியுடன், 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த விஷாரில் உள்ள பீமேஸ்வரர் கோவிலில் கயிலை வாத்தியம் முழங்க சிவவேள்வி நடந்தது.தொடர்ந்து சுவாமிக்கு, 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில், சிவனடியார்கள், சிவபக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.