பிரிந்தவரை சேர்க்கும் மரகதம்
ADDED :2264 days ago
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திரு நோக்கிய அழகியநாதர் என்னும் பெயரில் சிவன் இருக்கிறார். சிவ பெருமானை துளசி இலையால் மகாலட்சுமி பூஜித்த தலம் இது. திங்கட் கிழமை தோறும் இங்கு துளசி அர்ச்சனை நடக்கிறது. பிரதோஷ நாளில் மரகத லிங்கங்களுக்கு பூஜை நடக்கும். இதை தரிசித்தால் திருமணத்தடை அகலும். கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதியர் மீண்டும் சேர்வர்.