உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுமங்கலியாக வாழ...

சுமங்கலியாக வாழ...

மாங்கல்யபலம் வேண்டி அம்மனை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இந்த விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மேற் கொள்வர். அதிகாலையில் நீராடி காலையில் விநாயகரை வழிபட்டு விரதம் துவங்கவேண்டும். செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூக்களை அம்மனுக்கு அணிவிக்க வேண்டும். நைவேத்யமாக பால், வாழைப்பழம், வெற்றிலையுடன் பாக்கு  படைத்து வழிபட வேண்டும். விரதம் மேற்கொள்பவர்கள் ஒரு ஏழைக்காவது அன்னதானம் செய்து விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். இதன் பயனாக தீர்க்க சுமங்கலி பாக்கியம் உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !