உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விருத்தாசலம் வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

விருத்தாசலம் வண்ணமுத்து மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்

விருத்தாசலம்:விருத்தாசலம் வண்ண முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில், ஏராள மானோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

விருத்தாசலம் எம்.ஜி.ஆர்., நகர் வண்ணமுத்து மாரியம்மன் கோவில், ஆடி திருவிழா, கடந்த 8ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று (ஆக., 13ல்) தேரோட்டத்தை யொட்டி, காலை 9:00 மணிக்கு மேல், உற்சவ மூர்த்தி எழுந்தருளியதும், பூதாமூர், சிதம்பரம் ரோடு, கடலுார் ரோடு வழியாக தேரோட்டம் நடந்தது.

ஏராளமானோர் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.வரும் 16ம் தேதி, மணி முக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம், அலகு அணிந்து வீதியுலா வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !