புவனகிரி முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி விழா
ADDED :2606 days ago
புவனகிரி:கீழமணக்குடி தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடந்தது.
புவனகிரி அருகே கீழமணக்குடி தீப்பாய்ந்தாள் முத்துமாரியம்மன் கோவிலில் 56 ம் ஆண்டு தீ மிதி உற்சவத்தை முன்னிட்டு, கடந்த 4ம் தேதி கொடி ஏற்றி, காப்புக்கட்டுதல் மற்றும் சக்தி கரம் எடுத்து பூச்சொரிதல் நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 9ம் தேதி திருவிளக்கு பூஜையும், நேற்று முன்தினம் (ஆக., 13ல்) மாலை கரகம், காவடி கோவில் வளாகத்தை வந்ததடைந்து, தீ மிதி உற்சவம் நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்பாள் வீதியுலா காட்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. புவனகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.