உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேலுார் நாகம்மாள் கோயில் ஆடித்திருவிழா

மேலுார் நாகம்மாள் கோயில் ஆடித்திருவிழா

மேலுார்:  மேலுாரில் நாகம்மாள் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால் குடம், பறவைகாவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

விழாவை முன்னிட்டு பக்தர்கள் 30 நாட்களாக கடும் விரதமிருந்தனர். முக்கிய நிகழ்வாக நேற்று  (ஆக.,13) ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

இதில் ஐயாயிரம் பேர் பங்கேற்றனர். மண் கட்டி தெப்பக்குளத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோயில் சென்றது. அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து பக்தர்கள் அலகுகுத்தியும், பறவை காவடி, தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத் தினர். இதில் 25 அடி நீளமுள்ள ஒரே அலகில் பக்தர்கள் 6 பேர் நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று(ஆக.,14)முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. டி.எஸ்.பி., சுபாஷ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !