உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாந்த சேவையில் அத்தி வரதர் தரிசனம்

ஏகாந்த சேவையில் அத்தி வரதர் தரிசனம்

 காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடக்கும், அத்திவரதர் வைபவத்தில் ஏகாந்த சேவையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நாளை (ஆக.,15) மட்டும் மாலை 5 மணி வரை அத்திவரதர் தரிசனம் நடைபெறும். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளுக்கு நாளை கருடசேவை நடைபெற உள்ளதால் மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும். அத்திவரதர் வைபவத்தின் கடைசி நாளான ஆக.,16 அன்று காலை 5 மணி முதல் அத்திவரதர் தரிசனம் மீண்டும் துவங்கப்படும். அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்த பிறகே அத்திவரதர் தரிசனம் முழுமையாக நிறைவடையும் என காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !