கரூரில் கஞ்சிக்கலய விழா: பக்தர்கள் ஊர்வலம்
ADDED :2287 days ago
கரூர்: க.பரமத்தி அருகே, சின்னதாரா புரத்தில், ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில், ஆடி பூர கஞ்சிக் கலய விழா நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். வழிபாட்டு மன்ற வளாகத்தில் இருந்து கிளம்பிய கஞ்சிக் கலய ஊர்வலம், அரசு கால்நடை மருந்தகம், ஆரம்ப சுகாதார நிலையம், மேல்நிலைப் பள்ளி, போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் வழியாக மீண்டும் மன்றத்தை சென்றடைந்தது. இதில், கஞ்சிக் கலயம், அக்னி சட்டி, முளைப்பாரி எடுத்துக் கொண்டு ஏராளமான பக்தர்கள் சென்றனர். பின், வேள்வி பூஜை நடத்தி, வழிபாடு செய்தனர். விழாவில், வழிபாட்டு மன்ற தலைவர் சுலோசனா, செயலாளர் பிரகாஷ், நிர்வாகிகள் சந்திரமோகன், சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.