கிருஷ்ணராயபுரம் ஆளவந்தீஸ்வரர் கோவிலில் பட்டினத்தார் குருபூஜை விழா
ADDED :2346 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் கோவிலில், பட்டினத்தார் குரு பூஜை விழா நடந்தது. கிருஷ்ணராயபுரம் அடுத்த பழையஜெயங்கொண்டத்தில், ஆளவந்தீஸ்வரர் கோவில் உள்ளது. இதில் நேற்று (ஆக., 13ல்)பட்டினத்தார் குருபூஜை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.
சிவனடியார்கள், பட்டினத்தார் உருவ படத்தை, கோவில் வளாகத்தில் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் ஆளவந்தீஸ்வரர் மற்றும் ஆரணவல்லி தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகேஷ்வர பூஜை செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.