சிவகங்கை காளியம்மன் கோயிலில் மழைவேண்டி திருவிளக்கு பூஜை
ADDED :2349 days ago
சிவகங்கை:சிவகங்கை பிள்ளை வயல் காளியம்மன் கோயிலில் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது. 21வது ஆண்டாக நடந்த இப்பூஜையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. பெண்கள் திருவிளக் கேற்றி அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.