உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரசிகாமணி கோயிலில் கொடியேற்றம்

வீரசிகாமணி கோயிலில் கொடியேற்றம்

சேர்ந்தமரம் :வீரசிகாமணி ராஜகோபாலமன்னார் சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சங்கரநாராயணசுவாமி கோயிலின் துணை கோயிலான வீரசிகாமணி ராஜகோபாலமன்னார் சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும். இந்த ஆண்டிற்கான திருவிழா 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று சப்பர வீதி உலா நடந்தது. இன்று (28ம் தேதி) சுவாமி சிம்ம வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. நாளை (29ம் தேதி) ஆஞ்சநேயர் வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 4ம் திருநாள் ஆதிசேசன் வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 5ம் திருநாள் கருட வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 6ம் திருநாள் சுவாமி யானை வாகனத்தில் வீதிஉலா, 7ம் திருநாள் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா, 8ம் திருநாள் குதிரை வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 9ம் திருநாள் கருட வாகனத்தில் சுவாமி வீதிஉலா நடக்கிறது. 10ம் திருநாள் மதியம் சுவாமி ரத உற்சவ வீதிஉலா, இரவு கருட வாகனத்தில் வீதிஉலா, 11ம் திருநாள் கருட வாகனத்தில் வீதிஉலா வருதல் நடக்கிறது. திருவிழா நாட்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், சிறப்பு வாணவேடிக்கைகள் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையதுறை இணை ஆணையர் சுதர்சன், துணை ஆணையர், கோயில் செயல் அலுவலர் ராஜாமணி மற்றும் சமுதாய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !