பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஆடிபிரம்மோற்ஸவ விழா
ADDED :2288 days ago
பரமக்குடி:பரமக்குடி சுந்தரராஜப்பெருமாள் கோயில் ஆடிபிரம்மோற்ஸவ விழாவில், பெருமாள் தவழும் கண்ணன் திருக்கோலத்தில் முத்துப்பல்லக்கில் வீதிவலம் வந்தார்.நேற்று (ஆக., 15ல்) காலை முதல் வீதிவலம்வந்த கண்ணனுக்கு, பக்தர்கள் வெண்ணெய், நெய், பால் வழங்கி தரிசனம் செய்தனர்.
அப்போது கையில் வெள்ளிக்குடம் ஏந்தி, மயில் இறகு கொண்டையிட்டு, பின்னல் ஜடை கட்டி, தவழும் திருக்கோலத்தில் புல்லாங்குழல் ஏந்தியபடி பெருமாள் குழந்தையாக அருள்பாலித்தார். பின்னர் வைகை ஆற்றில் மண்டகப்படியில் எழுந்தருளிய பெருமாள் இரவு 10:00 மணிக்கு மேல் குதிரை வாகனத்தில் கள்ளழகர்திருக்கோலத்துடன் வீதிவலம் வந்து கோயிலை அடைந்தார். இன்று காலை தேரோட்டம் நடக்கிறது.