விக்கிரவாண்டியில் மழை வேண்டி பால்குட ஊர்வலம்
ADDED :2577 days ago
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி, வெங்கடேஸ்வரா நகர் ஏரி பகுதியில் உள்ள வன துர்க்கையம் மன் கோவிலில் ஆடிமாத உற்சவத்தை யொட்டி, மழை வேண்டி 108 பால்குட ஊர்வலம் மற்றும் சாகை வார்த்தல் விழா நடந்தது.
அதனையொட்டி, நேற்று (ஆக., 15ல்) காலை பேரூ ராட்சி அலுவலகம் அருகே உள்ள குளத்திலிரு ந்து பூங்கரகம் மற் றும் 108 பால் குடம் ஊர்வலம் புறப்பட்டு, மெயின் ரோடு வழியாக கோவிலை அடைந்தது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேக, அலங்காரத்திற்கு பிறகு மகா தீபாராதனையும், சாகை வார்த்தலும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.