உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் கோவில் குளத்தில் 3 சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர் கோவில் குளத்தில் 3 சிலைகள் கண்டெடுப்பு

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருபுவனத்தில்  சரபேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான முதலியார் குளம்  புதர்கள் மண்டி துார்ந்து போய் கிடந்ததால் கடந்த சில நாட்களாக துார்  வாரும் பணிகள் நடந்து வந்தது.நேற்று (ஆக., 16ல்) காலை குளத்தை துார்  வாரிக்கொண்டிருந்த போது சிலை போன்ற ஏதோ தட்டுப்பட்டது.

அந்த இடத்தை மெதுவாக தோண்டி பார்த்த போது 2 அடி உயரம் கொண்ட தட்சிணாமூர்த்தி, அம்மன், சரபேஸ்வரர் கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இந்த சிலைகள் நுாறு ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தாசில்தார் சிவக்குமார், திருவிடைமருதுார் இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சிலைகளை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.குளத்தில் சிலைகள் எதுவும் கிடைக்கலாம் என்பதால் மிக கவனத்துடன் துார் வாரும் பணிகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !