திருமங்கலம் ஆடி கடைசி வெள்ளி மாரியம்மன் கோயில்களில் பூஜை
ADDED :2290 days ago
திருமங்கலம் : ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு திருமங்கலம் காட்டு மாரியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜை நடந்தது. கூழ் பிரசாதம் வழங்கப்பட்டது.
திருமங்கலம் மீனாட்சி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பால மீனாட்சி அலங்காரம் செய்யப்பட்டு, மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜை செய்யப் பட்டது.
காட்டுபத்திரகாளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. அன்ன தானத்தை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். டி.புதுப்பட்டி ஆயிரம் கண்ணுடையாள் கோயிலில் 41 அடி உயர அம்மனுக்கு 1008 பால்குடங்களில் பாலபிஷேகம் செய்யப்பட்டது.