உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்

புதுச்சேரி செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டம்

புதுச்சேரி: வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவில் தேரோட்டத்தை கவர்னர்,  முதல்வர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.புதுச்சேரி அடுத்த  வீராம்பட்டினத்தில், பிரசித்திபெற்ற, செங்கழுநீரம்மன் கோவில் அமைந்துள்ளது.  

இக்கோவிலில் ஆடிப் பெருவிழா, கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது. தினமும் காலையில், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, மாலையில்,  அம்மன் வீதியுலா நடந்து வந்தது.

முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று (ஆக., 16ல்) காலை நடந்தது. கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி நகரமைப்புக் குழும சேர்மன் ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., ஆகி யோர் வடம் பிடித்து, தேரோட்டத்தை  துவக்கி வைத்தனர்.விழாவில் சபாநாயகர் சிவக் கொழு ந்து, அமைச்சர்கள்  நமச்சிவாயம், கந்தசாமி, அரசு கொறடா ஆனந்தராமன் உள்ளிட் டோர் கலந்து  கொண்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்துச் செல்ல, மாட வீதிகள்  வழியாக, மக்கள் வெள்ளத்தின் மத்தியில் ஆடி அசைந்து சென்று தேர் நிலையை  அடைந்தது.

தேர்த் திருவிழாவையொட்டி, அய்யப்ப சேவா சங்கம் ஏற்பாடு  செய்திருந்த சமபந்தி விருந்தை, முதல்வர், அமைச்சர்கள் துவக்கி  வைத்தனர்.விழா ஏற்பாடுகளை, கோவில் தனி அதிகாரி தாசில்தார் ராஜேஷ்  கண்ணா மற்றும் விழாக்குழுவினரும், தேர் திருப்பணிக் குழுவினரும்  செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !