உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கரூர் மாரியம்மன் அம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை

கரூர்: ஆடி கடைசி வெள்ளிகிழமையை முன்னிட்டு, கரூர் மாரியம்மன்  கோவில்களில் அம்மனுக்கு விதவிதமான அலங்காரம் செய்து, பூஜை நடந்தது.  ஆடி மாத வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விசேஷமான நாளாக கருதப்படுகிறது.  

அன்று அம்மன் கோவில்களில் சுவாமிக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரம்  செய்து சிறப்பு பூஜை நடக்கும். நேற்று (ஆக., 16ல்) ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், கரூரில் அனை த்து அம்மன் கோவில்களிலும் காலை, 5:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடந்தது. பசுபதிபுரம் வேம்பு மாரியம்மன் கோவிலில், அம்ம னுக்கு ரூபாய் நோட்டுகளால் தனலட்சுமி  அலங்காரம் செய்யப்பட்டது. இன்று (ஆக., 17ல்) பிற்பகல் வரை, தனலட்சுமி அலங்காரத்தில் அம்மனை தரிசிக்கலாம்.

இதேபோல், ஜவஹர் பஜார் மாரியம்மன், சின்னாண்டாங்கோவில் அங்காள பரமேஸ்வரி, காந்தி கிராமம் மாரியம்மன், தான்தோன்றிமலை ஆதி மாரியம்மன் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !