உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குளித்தலை புற்று மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை புற்று மாரியம்மன் கோவில் திருவிழா பக்தர்கள் பால்குட ஊர்வலம்

குளித்தலை: கணக்கபிள்ளையூர் மண்மேட்டு புற்று மாரியம்மன் கோவில்  திருவிழாவை முன்னிட்டு, பால் குட ஊர்வலம் நடைபெற்றது. குளித்தலை  அடுத்த, கணக்கபிள்ளையூர் அம்மன் நகரில், மண்மேட்டு புற்று மாரியம்மன்  கோவில் உள்ளது.

இக்கோவில், 14ம் ஆண்டு திருவிழாவையொட்டி, குளித்தலை, கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் இருந்து, பக்தர்கள் பால்குடம், தீர்த்தகுடம் எடுத்தும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்தனர். பின்னர், கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த  ஏராளமானோர் இதில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !