உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி மாரியம்மனுக்கு ரூபாய் நோட்டு அலங்காரம்

கிருஷ்ணராயபுரம்: ஆடி மாதம் நிறைவு நாளை முன்னிட்டு, சிந்தலவாடி  மாரியம்மன் கோவி லில், அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்  செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அருகே, சிந்தலவாடியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இதில், ஆடி மாத நிறைவை முன்னிட்டு, நேற்று (ஆக., 16ல்) அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. அப்போது அம்மன் சன்னதி, பிரகாரம் முழுவதும், ஒரு லட்சத்து, 8,000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.  இதில் மற்றும் மாலையில் நடந்த திருவிளக்கு பூஜையில், பக்தர்கள்  ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !