ஈரோடு ஆடி கடைசி வெள்ளியில் கோலாகல வழிபாடு
ஈரோடு: ஆடி கடைசி வெள்ளியையெட்டி, கபாலீஸ்வரர் கோவிலில், விளக்கு பூஜை நடந்தது.
ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று(ஆக., 16ல்) , அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு, பூஜை களை கட்டியது. ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது.
ஈரோடு பெரியமாரியம்மன், சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கள்ளுக்கடை மேடு காளியம்மன், வலசு மாரியம்மன், சத்திரம் மாரியம்மன், கோட்டை பத்தர காளியம்மன், திருவள்ளுவர் வீதி பொட்டுசாமி அம்மன் கோவில்களில், பக்தர்களின் கூட்டம் அலைமோதி யது. ஈரோடு, கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில், 108 குத்து விளக்கு பூஜை நடந்தது.
* கோபி அருகே, பாரியூர், கொண்டத்து காளியம்மன் கோவிலில், காலை முதலே, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குண்டத்தில் தீபமேற்றி வழிபட்டனர். கோபி சாரதா மாரியம்மன் கோவி லில், சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில், அம்மன் காட்சியளித்தார். மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவில்,கோபி பச்சமலை மற்றும் பவளமலை முருகன் கோவில்களில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* பவானி வேதநாயகி அம்மன், செல்லியாண்டியம்மன், மாரியம்மன், அந்தியூர் பத்ரகாளியம் மன், தவிட்டுப்பாளையம் சவுடேஸ்வரி அம்மன், வேம்பத்தி சொக்கநாச்சியம்மன் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.