உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பு.புளியம்பட்டியில் ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம்: செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு

பு.புளியம்பட்டியில் ஆடிப்பூர கஞ்சிக்கலய ஊர்வலம்: செவ்வாடை பக்தர்கள் பங்கேற்பு

புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியில், கஞ்சி கலயம் ஊர்வலமாக  கொண்டு வரப்பட்டு, ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  புன்செய்புளியம்பட்டி- சத்தி சாலையில், ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது.  ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.  

நடப்பாண்டு விழா, நேற்று (ஆக., 16ல்) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. மாலை, 5:00 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன், கஞ்சிக்கலய ஊர்வலம் தொடங்கியது.  

செவ்வாடை அணிந்த பெண் பக்தர்கள் பால்குடம், கஞ்சிக்கலயத்தை ஏந்தி  ஊர்வலமாக சென்றனர். அதன்பின் கஞ்சி கலயத்தை ஆதிபராசக்தி அம்மனுக்கு  அபிஷேகம் செய்து, சிறப்பு வழிபாடு செய்தனர். விழாவையொட்டி, கோவில்  நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !