சின்னசேலத்தில் ஆவணி அவிட்டம் பூணுால் அணிவிப்பு
ADDED :2239 days ago
சின்னசேலம்: சின்னசேலத்தில் ஆவணி அவிட்ட பூணுால் அணியும் விழா ஆர்ய வைசியர்கள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் நடந்தது.நிகழ்ச்சியில், ஆர்ய வைசியர்கள் அனைவரும் கோவிலில் கணபதி பூஜை, வேள்வி பூஜை காயத்ரி மந்திரம் ஓதி ஒரே நேரத்தில் அனைவரும் பூணுால் அணிந்து கொண்டனர்.விழாவில் கடைவீதி, விஜயபுரம், ரயிலடி, அம்சகுளம், மெயின் ரோடு, ஆஸ்பத்திரி ரோடு, அண்ணாநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆர்ய வைசியர்கள் பங்கேற்றனர்.