கடலாடி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
ADDED :2291 days ago
கடலாடி : கடலாடியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை நடந்தது.மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. 1008 கண்ணாடி வளையல்களால்அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். செவ்வாடை அணிந்த பெண்கள் கோயில் வளாகத்தில் சக்தி ஸ்தோத்திரம், நாமாவளி, பஜனை, சகஸ்ரநாம அர்ச்சனை, மாங்கல்ய பூஜை உள்ளிட்டவைகளை செய்தனர். பூஜைகளை தலைமையாசிரியர் வீரமாகாளி செய்தார். கடலாடி தேவர் உறவின் முறைத்தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் பூவலிங்கம், பொருளாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.