அவிநாசியில் விவேகானந்தர் ரதத்துக்கு வரவேற்பு
ADDED :2241 days ago
அவிநாசி: திருமுருகன்பூண்டியில், அன்பு இல்லம்ஸ்ரீ விவேகானந்தர் குருகுல உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. சேலம், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் சார்பில், சுவாமி விவேகானந்தர் ரதம், நேற்று 18ம் தேதி திருமுருகன்பூண்டி கொண்டு வரப்பட்டது.
ரதத்துக்கு, அங்குள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில், வரவேற்பு வழங்கப்பட்டது. அன்பு இல்ல நிறுவனர் சுவாமி பூர்ண சேவானந்த மஹராஜ், வரவேற்றார்.ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிர மத்தை சேர்ந்த சுவாமி சிக்கதானந்தர் மஹராஜ், கேரள ஆசிரமத்தைசேர்ந்த சுவாமி இந்து நாதனந்தா ஆகியோர் தலைமையில், மாணவ, மாணவியருக்கு சுவாமி விவேகானந்தரின் நல்லெண்ண கருத்துகள் போதிக்கப்பட்டன. பின், அன்னதானம் வழங்கப்பட்டது.