உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

காரைக்குடி : காரைக்குடி கணேசபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் 1008  விளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பெண்கள் அம்மனை வழிபட்டனர்.

மேலும் கிணற்றடி காளியம்மன் கோயில், முத்துராமலிங்கத்தேவர் நகர்  நார்த்தாமலை மாரி யம்மன் கோயில், வைரவபுரம் நல்லமுத்து மாரியம்மன்  கோயில்களில் திருவிளக்கு பூஜை நடந்தது.

நெசவாளர்காலனி அரசு போக்குவரத்து மண்டல அலுவலகம் அருகில் அமைந்துள்ள வீர பத்திர காளியம்மன் கோயில், பாதரக்குடி திட்டுமலை காளியம்மன் கோயில், சங்கந்திடல் காளியம்மன் கோயில்களில் பால்குடம், பூத்தட்டு, முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்து அம்மனை வழிபட்டனர்.

கல்லுப்பட்டி வயல் தம்பிராட்டி கோயில், கோட்டையூர் வேலங்குடி பிடாரி  அம்மன் கோயில், அரியக்குடி பாரதிநகர் ஆகாச கருப்பர் கோயில், செல்லாயி  அம்மன் கோயில், கானாடு காத்தான் வசந்தம் நகர் எல்லையம்மன் கோயில்களில்  சிறப்பு பூஜைகள் நடந்தது. காரைக் குடி என்.ஜி.ஓ காலனியில் நாகாத்தம்மன்  கோயிலில் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் மற்றும் கோமாதா பூஜை நடந்தது.  ஏற்பாடுகளை மாவட்ட இந்து முன்னணி செய்திருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !