உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்துார் அறிவுத்திருக்கோயில் முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் அறிவுத்திருக்கோயில் முப்பெரும் விழா

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் அறிவுத்திருக்கோயிலின் 15ம்  ஆண்டுவிழா, அருட்தந்தை வேதாத்திரி மகரிஷியின் 109 வது ஆண்டுவிழா,  மனைவிநல வேட்புவிழா ஆகிய முப்பெரும் விழாவில், மலர் மற்றும் கனிகளை  பரஸ்பரம் வழங்கி, தம்பதிகள் அன்பை வெளிப்படுத்தினர்.

மனவளக்கலை மன்ற தலைவர் சர்வஜித் தலைமை வகித்தார். செயல் தலைவர்  முருகான ந்தம் முன்னிலை வகித்தார். துணைதலைவர் புலவர் வெள்ளை  வரவேற்றார். செயலர் ராமர் ஆண்டறிக்கை வாசித்தார். ஆழியார் உலக சமுதாய  சேவா சங்க விரிவாக்க இயக்குனர் தங்க வேலு, கல்பாக்கம் அணுமின் நிலைய  முன்னாள் இயக்குனர் வேல்முருகன்-ராஜஸ்ரீ தம்பதி, ஆண்டாள் கோயில் செயல்  அலுவலர் இளங்கோவன்-மேனகா தம்பதியின் பேசினர். அருட் தொண்டர்கள்  கவுரவிக்கபட்டனர்.

பின்னர் நடந்த மனைவி நலவேட்பு விழாவில், இளம் தம்பதி முதல் முதிய  தம்பதிகள் வரை, 150க்கும் மேற்பட்ட தம்பதியினர் பங்கேற்றனர். இதில் மலர்  மற்றும் கனிகளை, தம்பதிகள் ஒருவருக்கொருவர் வழங்கி, தங்கள் அன்பை  பரிமாறி, பரஸ்பர உறுதிமொழி எடுத்தனர். பொருளாளர் முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !