உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்தூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆத்தூர் முனீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை

ஆத்தூர்: ஆவணி முதல் ஞாயிறையொட்டி, ஆத்தூர் அருகே, கொத்தாம்பாடி,  முனீஸ்வரன் கோவிலில், பால் அபிஷேகம் நடந்தது. புஷ்ப அலங்காரத்தில்  சுவாமி அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல்,  ராணிப்பேட்டை, கோவிந்தன் தெரு, சந்து மாரியம்மன் கோவிலில் சக்தி அழைத்து  வந்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின், கிடா, கோழி வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு, உலக நன்மை, மழை பெய்ய வேண்டி, கூழ் படையல் செய்து, அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ராணிப்பேட்டை, சிவாஜி தெருவிலுள்ள திருவிழி அம்மன் கோவில் திருவிழா, நேற்று 18ம் தேதி தொடங்கியது.  விநாயகர் பூஜை, சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. திருவிழி அம்மன், புஷ்ப  அலங்காரத்தில் அருள் பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !