உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்ட அரசர் வெளியிட்ட ரூ.1 வெள்ளி காசு

வீரபாண்டியில் இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்ட அரசர் வெளியிட்ட ரூ.1 வெள்ளி காசு

வீரபாண்டி: கடந்த, 15ம் நூற்றாண்டில், இந்து - முஸ்லிம் ஒற்றுமையாக வாழ, ’தீன்  இலாஹி’ எனும் புதிய மதத்தை உருவாக்கிய மன்னர் வெளியிட்ட, ஒரு ரூபாய்  வெள்ளி காசு கிடைத் துள்ளது.

இதுகுறித்து, சேலம், பாராமஹால் நாணய சங்க இயக்குனர் சுல்தான்  கூறியதாவது: முகலாய மன்னர் பாபரின் பேரன், ஜலாலுதின் அக்பர், கி.பி., 1556  முதல், 1605 வரை, இந்தியாவை ஆண்டார். 13ம் வயதில், சக்கரவர்த்தியாக  முடிசூட்டப்பட்டார். இந்தியாவை, 15 மாகாணங் களாக பிரித்து, ஆட்சி செய்து  வந்தார். அவரது ஆட்சியில், குழந்தை திருமண வழக்கத்தை தடுத்து நிறுத்தினார்.  இந்துக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த, ’ஜஸியா’ எனும் வரியை நீக்கினார். இந்து -  முஸ்லிம் ஒற்றுமையாக இருக்க, அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி, இருவருக்கும்  பொதுவாக, ’தீன் இலாஹி’ எனும் மதத்தை தோற்றுவித்தார். இரு மதத்தினரும்  இணைந்து செயல்பட்டால், இந்தியா வளர்ச்சி பெறும் என்பதில், உறுதியாக  இருந்தார். இவரது காலத்தில், 11.10 மில்லி கிராம் எடையில், சதுர வடிவில், ஒரு  ரூபாய் வெள்ளி காசு வெளியிடப்பட்டது.

அதில், ஒரு காசு, உத்தரபிரதேசத்தில்  இருந்து, தனக்கு கிடைத்தது. இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வித்திட்ட அரசர்  வெளியிட்ட நாணயம் இது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !