உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரபாண்டியில் விஷ்ணுபதி புண்யகால பூஜை: தசாவதார பெருமாளுக்கு அபிஷேகம்

வீரபாண்டியில் விஷ்ணுபதி புண்யகால பூஜை: தசாவதார பெருமாளுக்கு அபிஷேகம்

வீரபாண்டி: விஷ்ணுபதி கமிட்டி சார்பில், ஆண்டுதோறும் வைகாசி, ஆவணி,  கார்த்திகை, மாசி யில், விஷ்ணுபதி புண்யகால பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி,  சேலம், இரும்பாலை, கணபதி பாளையம், வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று,  18ம் தேதிகணபதி யாகத்துடன், பூஜை தொடங் கியது. அதில், வீடு கட்டுவதிலுள்ள சிக்கல் தீர, வாஸ்து பூஜை; திருமண தடைகளை நீக்கும், சுயம்வரா பார்வதி யாகம்; ஆரோக்கியத்தை அள்ளித்தரும், மிருத்யுஞ்ஜெய் யாகம்; உலக நன்மைக்கு, மகா சுதர்சன யாகம் நடத்தி, பூஜையில் வைத்த கலசங்களின் புனித நீரால், குபேர லிங்கேஸ்வரர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், தசாவதார பெருமாளுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்,  மாணவர்களுக்கு யாகத்தில் வைத்து பூஜித்த, பேனாக்கள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !