விழுப்புரத்தில், ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம்
விழுப்புரம் : விழுப்புரத்தில், ஆதிபராக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வ லம் நடந்தது.விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடு மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில், மழை வேண்டியும், இயற்கை சீற்றங்கள் தனியவும் ஆடிப்பூர கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில், இருந்து புறப்பட்ட ஊர்வலத்திற்கு மாவட்ட தலைவர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். டவுன் டி.எஸ்.பி., திருமால், ஊர்வலத்தை துவக்கி வைத்தார். இதில், 1000 பேர் கஞ்சி கலயம் மற்றும் தீச்சட்டி ஏந்தி கிழக்கு பாண்டி ரோடு வழியாக சக்தி பீடத்திற்கு சென்று காலை 11:00 மணிக்கு கஞ்சி வார்த்தல் நடந்தது.தொடர்ந்து, காலை 11:30 மணியளவில், நடந்த பால் அபிஷேகத்தை மூத்த வழக்கறிஞர் சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். அப்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.