உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் உழவார பணி

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் உழவார பணி

திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில், மீனாட்சிசுந்தரேஸ் வரர் உழவாரப் பணி குழுவினர், நேற்று 18ல், இறங்கி சுத்தம்  செய்தனர்.

திருமுல்லைவாயல், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணி குழுவினர், பல்வேறு சிவன் கோவில்களை தேர்வு செய்து ஒவ்வொரு மாதமும், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, கோவில் வளாகம் மற்றும் குளத்தை சுத்தம் செய்யும் பணி செய்து வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை, ஆறு சிவன் கோவில்களை தேர்வு செய்து சுத்தம் செய்து, சீரமைப்பு பணிகள் மேற்கொண்டுள்ளனர்.இந்நிலையில், திருவாலங்காடு, வடாரண் யேஸ்வரர் கோவிலில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணியின், 113வது உழவாரப் பணிகள் நேற்று 17ல் நடந்தது.

உழவாரப் பணிக் குழுவினர் அமைப்பாளர், சிவசத்யபாபு தலைமையில் மொத்தம், 113 சிவனடி யார்கள், வடாரண்யேஸ்வரர் கோவில் குளத்தில் இறங்கி, கொட்டும் மழையில் செடி, கொடி களை அகற்றி சுத்தம் செய்தனர்.மேலும், கோவில் வளாகத்தில் இருந்து செடிகள் மற்றும் புற்களை அகற்றி சுத்தம் செய்தனர். நேற்று 17ல் காலை முதல், மாலை வரை, தொடர்ந்து துாறல் மழை பெய்த போதும், சிவன் பக்தர்கள் குளம் மற்றும் கோவிலை சுத்தம் செய்தனர்.

அடுத்த மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, திருவள்ளூர் அடுத்த,  கூவம் பகுதியில் உள்ள சிவன் கோவிலை தேர்வு செய்து, உழவாரப் பணிகள்  செய்ய உள்ளதாக, மீனாட்சி சுந்தரேஸ்வரர் உழவாரப் பணிக் குழுவினர்  தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !