உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சிபுரம் அம்மன் கோவில் விழா பக்தர்கள் ஊர்வலம்

காஞ்சிபுரம் அம்மன் கோவில் விழா பக்தர்கள் ஊர்வலம்

காஞ்சிபுரம்: காலுார் மாரியம்மன் கோவில், ஆவணி திருவிழா, நேற்று  17ல் விமரிசையாக நடைபெற்றது. இதில், பக்தர்கள் அலகு குத்தி, நேர்த்தி கடன்  செலுத்தினர்.

காஞ்சிபுரம் அடுத்த, காலுார் பகுதியில் ஆலியம்மன், மாரியம்மன்  கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆவணி மாத திருவிழா, ஆண்டு தோறும்  விமரிசையாக நடைபெறும்.இந்தாண்டு திருவிழாவிற்காக, ஆலியம்மனுக்கு  ஊரணி பொங்கல் வைத்து, அபிஷேகம் நடந்தது. இதை யடுத்து, மாரியம்மனுக்கு  காப்பு கட்டிய பக்தர்கள், பூங்கரகம் ஊர்வலம் சென்றனர். தொடர்ந்து, நேற்று  18ல் மாலை, நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக, மாரியம்மன் கோவில் இருந்து  ஆலிய ம்மன் கோவிலுக்கு, பக்தர்கள் அலகு குத்தி, வாகனங்களில் தொங்கியபடி,  ஊர்வலமாக சென்றனர். இரவு, மலர் அலங்காரத்தில் வீதியுலா சென்ற அம்மனை,  பக்தர்கள் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !