வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு சிறப்பு வழிபாடு
ADDED :2265 days ago
திருக்கோவிலூர்: திருக்கோயிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பிரம்மாவுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் படைப்பு கடவுளான பிரம்மாவிற்கு தமிழ் மாத பிறப்பு அன்று ஒவ்வொரு மாதமும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை 6:00 மணிக்கு கோவிலின் கருவறை வெளிச் சுவற்றின் வெளிபுறத்தில் உள்ள பிரம்மாவிற்கு மகா அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம், ஷோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்து வழிபாட்டில் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.