பழநியில் விநாயகர் சதுர்த்தி விழா சிலைகள் செய்யும் பணி மும்முரம்
பழநி : விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதையொட்டி, பழநியில் இந்து அமைப்புகள் சார்பில், நுாற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செய்யும் பணி மும்முரமாக நடக்கிறது.
பழநியில் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து அமைப்புகள் சார் பில் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இந்தாண்டு செப்., 2ல் விநாயகர் சதுர்த்தி விழாவு க்காக விழுப்புரத்தில் இருந்து காகிதக்கூழ், மாவுப் பொருளில் செய்த விநாயகர் சிலைகளின் பாகங்கள் தனித்தனியாக கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை ஒன்றாக இணைத்து வண்ணம் பூசும்பணி நடக்கிறது. வரும் செப்.,5 முதல் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்கிறது. இதுகுறித்து இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் கூறுகையில், ”4அடி முதல் 11அடி வரை உயரமுள்ள 180 விநாயகர் சிலைகள் செய்கிறோம். செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி அன்று பழநி நகர், கிராமப்பகுதிகளில் பிரதிஷ்டை செய்து சிறப்புபூஜை செய்ய உள்ளோம். செப்., 5ல் பாத விநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று சண்முகநதியில் கரைக் கப்படும்” என்றார்.