குன்னுார் அருவங்காடு விநாயகர் கோவிலில் ஆவணி அவிட்டம் விழா
ADDED :2345 days ago
குன்னுார்:குன்னுார் அருவங்காடு விநாயகர் கோவிலில், 40வது ஆவணி அவிட்டம் விழா நடந்தது .விழாவில், 70க்கும் மேற்பட்டோர் பூணுால் அணிந்தனர். 1008 முறை, காயத்ரி மந்திரம் பாராய ணம் செய்யப்பட்டது. பிராமணர் சமுதாய சங்க தலைவர் நாகேஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர் முன்னிலை வகித்தார். கோவில் அர்ச்சகர் மகேஷ் பூஜைகளை நடத்தினார். ஹோமம் வளர்க்கப்பட்டு, காண்டரிஷி தர்ப்பணம் உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்த ப்பட்டன. 1008 முறை காயத்ரி மந்திரம் பாராயணம் செய்யப்பட்டது.