உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவை மேட்டுப்பாளையத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கோவை:மேட்டுப்பாளையம் போலீஸ் குடியிருப்பு அருகே, மேதகார வீதியில் வேணுகுல பண்டரி பஜனை கோவில் உள்ளது. இங்கு வரும், 23 ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப் படுகிறது.

காலை 7.00 மணிக்கு காரமடை சுதர்சன பட்டர் சுவாமிகள் முன்னிலையில் மகா சுதர்சன ஹோமம் நடக்கிறது. அதன் பின், திவ்ய நாம சங்கீர்த்தனம், சாற்று முறை நடக்கிறது. மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.பிற்பகல் 3:00 மணி முதல் கிருஷ்ணர் கருட வாகனத்தில் திருவீதி உலா வருகிறார். அப்போது, பஜனை பாடல், கோபியர்களின் கும்மியாட்டம்,கோலாட்டம் நடக்கிறது. இதில், கிருஷ்ணன் வேடமிட்டு நுாற்றுக்கணக்கான குழந்தைகள் ஊர்வலத்தில் பங்கேற்கின்றனர்.இரவு, 7:00 மணிக்கு வாசுதேவன் பாகவதர் தலைமையில் சிறப்பு பஜனை நிகழ்ச்சி நடக்கிறது. இதை தொடர்ந்து உறியடி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !