உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்

குமாரபாளையம் வட்டமலை ஆண்டவர் கோவில் தேரோட்டம்

அன்னூர் : குமாரபாளையம், வட்டமலை ஆண்டவர் கோவில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா, நாளை துவங்குகிறது. குமாரபாளையத்தில், பழமையான வட்டமலை ஆண்டவர் கோவில் வளாகத்தில், பிரசித்தி பெற்ற, என்றும் வற்றாத, சுனை தீர்த்தம் உள்ளது. இக்கோவிலில், நான்காம் ஆண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, 31ம் தேதி, கிராம தேவதை வழிபாடுடன், துவங்குகிறது. ஏப்., 1ம் தேதி கணபதி பூஜை, கொடியேற்றம் நடக்கிறது. ஏப்., 2, 3 தேதிகளில், காலை, யாகசாலை பூஜையும், மாலையில், சுவாமி உட்பிரகார உலாவும், நடக்கிறது. ஏப்., 4ம் தேதி, சுவாமி திருக்கல்யாண உற்சவம், யானை வாகனத்தில், சுவாமி உலா, நடக்கிறது. தேரோட்டம், 5ம் தேதி, காலை, 10.00 மணிக்கு, நடக்கிறது. பேரூர் ஆதீனம், சாந்தலிங்க ராமசாமி அடிகள், இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர அடிகள் ஆகியோர், வடம் பிடித்து, துவக்கி வைக்கின்றனர். மதியம், அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு, நடன நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்., 6ம் தேதி, மாலை, பரிவேட்டை, குதிரை வாகனத்தில், சுவாமி உலா, தெப்போற்சவம், நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !