காரமடை அரங்கநாதர் கோவிலில் ரூ. 26 லட்சம் உண்டியல் வசூல்!
காரமடை : காரமடை, அரங்கநாதர் கோவிலில், தேர்த்திருவிழா முன்னிட்டு வைக்கப்பட்ட உண்டியல், டிக்கெட் விற்பனை மூலம், 26 லட்சத்து 14 ஆயிரத்து 778 ரூபாய், வசூல் ஆனது. காரமடை, அரங்கநாதர் கோவிலில், மாசிமகத் தேர்த்திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வைக்கப்பட்ட உண்டியலில், பணம், காசு எண்ணும் பணி, மருதமலை கோவில், துணை ஆணையர் குமரதுரை, தலைமையில், கோவில்,செயல் அலுவலர், ராதாகிருஷ்ணன், தக்கார் ஆறுமுகம், மேலாளர் ராமராஜன் ஆகியோர், முன்னிலையில் நடந்தது. இதில், ஒரு மாத உண்டியலில், 11 லட்சத்து 11ஆயிரத்து 101 ரூபாயும், திருவிழாவை முன்னிட்டு வைக்கப்பட்ட, சிறப்பு உண்டியலில், ஏழு லட்சத்து 69 ஆயிரத்து 672 ரூபாயும், டிக்கெட் விற்பனை செய்த வகையில், ஏழு லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் என, மொத்தமாக, 26 லட்சத்து 14 ஆயிரத்து 773 ரூபாய், வசூல் ஆனது. தங்கம் 50 கிராம், வெள்ளி 115 கிராம் நகைகள், உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இப்பணியில், கோவில் ஊழியர்கள், அரசு பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.