மழலை அருளும் மந்திரம்
ADDED :2354 days ago
சஷ்டி விரதம் இருந்து வழிபடுவோருக்கு குழந்தை வரம் தருபவர் முருகப்பெருமான். அன்று கந்தசஷ்டி கவசம் படியுங்கள். ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவணபவ’ என்பதை முடிந்தளவு ஜபியுங்கள். திருநீறை ஒரு தட்டில் பரப்பி ஆள்காட்டி விரலால் ’ஓம் சரவணபவ’ என எழுதி, நெற்றியில் பூசுங்கள். மாலையில் அருகிலுள்ள முருகனுக்கு பால் அபிஷேகம், நெய்தீபம் ஏற்றுங்கள். கிரிவலம் செல்வது சிறப்பு. பிறக்கும் குழந்தை ஆணாக இருந்தால் முருகன் பெயரையும், பெண்ணாக இருந்தால் வள்ளி, தேவசேனா பெயரை வைப்பதாக நேர்ந்து கொள்ளுங்கள். முருகன் அருளால் வீட்டில் மழலைக் குரல் கேட்கும்.