உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதார கொடுங்கள்

மனதார கொடுங்கள்

பாரசீக மன்னர் ஒருவர் வீரர்களுக்கு போட்டி நடத்துவார். ஆனால் பரிசளிக்க விரும்ப மாட்டார். அவர் ஒருமுறை நவரத்தின மோதிரம் ஒன்றை கயிற்றில் கோர்த்து, அரண்மனை உச்சியில்  தொங்கவிட்டார். யாருக்கும் கிடைத்து விடக் கூடாது என்று அப்படி செய்தார்.  மோதிரத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசையில் வீரர்கள் ஒவ்வொருவராக அம்பு தொடுத்தனர்.  ஆனால் யாருக்கும் மோதிரம் கிடைக்கவில்லை.  யாருக்கும் மோதிரம் கிடைக்கப் போவதில்லை என சந்தோஷப்பட்டார் மன்னர். அரண்மனை எதிரில் சிறுவன் ஒருவன் வில்லுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் விட்ட அம்பு, மோதிரம் இருந்த கயிற்றை அறுத்தது. பிறகென்ன! சிறுவனுக்கு மோதிரம் கிடைத்தது.  முழுமனதோடு கொடுங்கள். இல்லாவிட்டால், அந்தப் பொருள் நம்மை விட்டுப் போகும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !