கோதுமை பொங்கல் பிரசாதம்
ADDED :2284 days ago
தேவையான பொருட்கள்
கோதுமை ரவை – ஒரு கப்
பாதாம் பருப்பு – 10
பிஸ்தா பருப்பு – 8
குங்குமப்பூ – ஒரு டீஸ்பூன்
ஏலக்காய்த்தூள் – சிட்டிகை,
சர்க்கரை – ஒரு கப்
நெய் – 8 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அடிகனமான வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நெய் விட்டு பாதாம், பிஸ்தா பருப்புகளை வறுத்துத் தனியே வைக்கவும். அதே வாணலியில் மீதியுள்ள நெய்யை ஊற்றி கோதுமை ரவையை வறுத்து 2 கப் நீர் விட்டு வேக வைக்கவும். வெந்ததும் சர்க்கரையைச் சேர்த்து நன்கு கிளறி, வறுத்த பருப்புகள், ஏலக்காய்த்துாள், குங்குமப்பூ சேர்த்து மேலும் கிளறி விட்டு இறக்கவும். ராஜஸ்தான் மாநிலம் ’நாத்வாரா’ திருத்தலத்தில் அருளும் பகவான் கிருஷ்ணருக்கு கோதுமைப் பொங்கல் நைவேத்யம் செய்யப்படுகிறது.