அலங்காநல்லுார் அழகர்கோவிலில் மழை வேண்டி வழிபாடு
ADDED :2343 days ago
அலங்காநல்லுார் : வயல் வெளிகளில் கிடை மாடுகள் வளர்த்து வரும் கீதாரிகள் (உரிமையாள ர்கள்), தண்ணீர் மற்றும் உணவுதானிய பற்றாக்குறையால் சிரமப் படுகின்றனர்.
இதனால் தேவையான அளவு தண்ணீர் கிடைக்கவும், உணவு தானிய பற்றாக்குறை நீங்க தொடர்ந்து பருவமழை பெய்ய வேண்டியும் அழகர்கோவிலில் கிடாய் வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். முன்னதாக பாரம்பரிய வழக்கப்படி அழகர்மலைஉச்சியில் உள்ள நுாபுரகங்கையில் புனித நீராடி கள்ளழகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்த பின் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை முத்துராசு, ராமகிருஷ்ணன், சீமான், காசி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.