மதுரை ராமானுஜபுரம் பத்ரகாளியம்மன் கோயில் விழா
ADDED :2239 days ago
மதுரை : மதுரை ராமானுஜபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் 56வது ஆண்டு ஆடி உற்ஸவ விழா நடந்தது.
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. திருவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் மாவிளக்கு, பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அறங்காவலர் திராவிடமாரி, விழாக்குழு தலைவர் பால்பாண்டி, நிர்வாகிகள் பாண்டி, மதுரை வீரன், சாமிக்கண்ணு, சக்திவேல், அன்புமணி, சரவணன் மற்றும் பலர் செய்திருந்தனர்.