உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா: ஆலோசனைக் கூட்டம்

மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா: ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம்:மேல்மலையனுார் அங்காளம்மன் கோவில் அமாவாசை  திருவிழாவையொட்டி, பக்தர்களுக்கான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும்  முன்னேற்பாடு குறித்த ஆலோச னைக் கூட்டம் நடந்தது.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர்  சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு)  சரஸ்வதி, துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) டாக்டர் பாலுசாமி, இந்து சமய  அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு உட்பட அலுவலர்கள் பலர்  பங்கேற்றனர்.

கூட்டத்தில், கலெக்டர் சுப்பிரமணியன் பேசியதாவது:கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு செஞ்சி பேரூராட்சி மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர  வேண்டும். ஊராட்சி ஒன்றிய அலுவ லகம் மூலம் தற்காலிக பஸ் நிலையங்கள்,  கழிவறை ஏற்படுத்தித் தரவேண்டும்.

போக்குவரத்து துறை மூலம் சிறப்பு பஸ்கள்  இயக்க வேண்டும்.மின்வாரியம் மூலம் திரு விழா நாட்களில் தேவையான மின்  பணியாளர்கள் பணியில் இருப்பதோடு, மின் தடைகளை சரி செய்யவும்,  விழாக்காலமான இரு நாட்களில் மும்முனை இணைப்பு மூலம் மின்சாரம் வழங்க  வேண்டும்.கோவிலின் பாதுகாப்பு கருதி, பக்தர்கள் அதிகம் கூடும் இடங்களில்  அதிநவீன கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலையங்களில் இருந்து கண்காணிக்க வேண்டும். கோவில் வளாகத்தில் மருத்துவக் குழு மற்றும் அவசர ஊர்திகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !