உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஆவணி பூஜைகள் நிறைவு: ஓண பூஜைகள் செப்.9ல் தொடக்கம்

சபரிமலையில் ஆவணி பூஜைகள் நிறைவு: ஓண பூஜைகள் செப்.9ல் தொடக்கம்

சபரிமலை, சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் முடிந்து நேற்று இரவு நடை அடைக்கப்பட்டது. திருவோண பூஜைகளுக்காக செப்., 9ல் மீண்டும் திறக்கிறது.

ஆவணி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை ஆக. 16 மாலை 5:00 மணிக்கு திறந்தது.ஆக.17 முதல் நேற்று வரை ஐந்து நாட்கள் பல்வேறு பூஜைகளும், தினசரி படிபூஜையும் நடந்தது. புதிய மேல்சாந்திகள் தேர்வும் நடந்தது. ஆவணி மாதத்துக்கான பூஜைகள் நிறைவு பெற்று நேற்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. திருவோண பூஜைகளுக்காக செப்., 9 மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். நான்கு நாட்கள் ஓண சிறப்பு பூஜைகள் நடந்து இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஓணபூஜை நடைபெறும் நாட்களில் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !