மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
4907 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
4907 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
4907 days ago
தர்மபுரி: தர்மபுரி அடுத்த அன்னசாகரம், விநாயகர் சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம், 5ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, நேற்று காலை 7.30 மணிக்கு சாலுக்கிரகம் அழைத்தல், மாலை 7 மணிக்கு புற்று மண் எடுத்தல், இரவு 9 மணிக்கு வாஸ்து சாந்தி நடந்தது. மாலையில் ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடந்தன. இன்று (மார்ச் 30) காலை 9.15 மணிக்கு சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரத்தில் ரிஷப லக்னத்தில் திருக்கொடி ஏற்றுதலும் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், இரவு 8 மணிக்கு ஆட்டுக்கடா வாகனத்தில் ஸ்வாமி வீதி உலாவும் நடந்தது. நாளை (மார்ச் 31) இரவு 8 மணிக்கு, நரி வாகனத்தில் ஸ்வாமி உலாவும், 1ம் தேதி இரவு 8 மணிக்கு பூத வாகனத்திலும், 2ம் தேதி நாக வாகனத்தில் ஸ்வாமி வீதி உலா நடக்கிறது. 3ம் தேதி காலை 7.30 மணிக்கு பக்தர்கள் பால் குடும் எடுத்து ஊர்வலமாக கோவில் வந்தடைந்து ஸ்வாமிக்கு பால் அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மேல் வள்ளி, தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய ஸ்வாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து, தோரண வாயிலில் ஊஞ்சல் சேவையும், மயில் வாகனத்தில் ஸ்வாமி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது. ஏப்ரல் 4ம் தேதி மாலை 4.30 மணிக்கு, விநாயகர் ரதம் யானை வாகன உற்சவமும், 5ம் தேதி காலை 7.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் ஸ்வாமி ரதம் ஏற்றுதல், நிலை பெயர்தலும், மாலை 4.30 மணிக்கு மஹா ரதம் இழுத்தல் நடக்கிறது. இதையொட்டி அன்னசாகரம் செங்குந்தர் திருமண மண்டபத்திலும், கோவில் வளாகத்திலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்வாமி வீதி உலாவும், 6ம் தேதி காலை வேடர்பறி உற்சவம், 7ம் தேதி மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு, மாலை 4.30 மணிக்கு திருக்கொடி இறக்கம், இரவு 8 மணிக்கு பல்லக்கு உற்சவம், 8ம் தேதி இரவு 9 மணிக்கு சயன உற்சவம், 9ம் தேதி மாலை 4 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ரமேஷ், அர்ச்சகர்கள் கிருபாகரன் குருக்கள், தண்டபாணி குருக்கள் மற்றும் விழா குழுவினர் செங்குந்த சிவநேய செல்வர்கள் செய்கின்றனர்.
4907 days ago
4907 days ago
4907 days ago