உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டம்பட்டிபுதுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

காட்டம்பட்டிபுதுாரில் கிருஷ்ண ஜெயந்தி விழா

நெகமம்:நெகமம் அடுத்த காட்டம்பட்டிபுதுாரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜபெருமாள், விநாயகர், ஆஞ்சநேயர் கோவில்கள் அமைந்துள்ளன. கோவிலில், 23ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா நாளையும், நாளை மறுநாளும் (23, 24ம் தேதி) நடக்கிறது.நாளை 23ம் தேதி இரவு, எட்டு மணிக்கு கோகுலாஷ்டமி நிகழ்ச்சி துவங்குகிறது.

கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, காலை, 10:00 மணி க்கு அபிஷேக ஆராதனை, காலை, 11:00 முதல், 12:00 மணி வரை மகா தீபாராதனை நடக்கி றது.அன்று இரவு, 7:00 மணிக்கு சுவாமி திருவீதியுலா, 7:30 மணிக்கு பஜனை மற்றும் உரியடி, இரவு, 8:00 மணிக்கு வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !