அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல் திறப்பு
ADDED :2243 days ago
அலங்காநல்லுார் : அழகர்கோவில் சுந்தரராஜபெருமாள் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. தங்கம் 54 கிராம், வெள்ளி 209 கிராம், ரூ.63,49,998 மற்றும் வெளி நாட்டு டாலர் நோட்டுகள் இருந்தன. சோலைமலை முருகன் கோயில் உண்டியல்களும் திறந்து எண்ணப் பட்டன. இதில் தங்கம் 23 கிராம், வெள்ளி 546 கிராம், ரூ.11,65,714 மற்றும் வெளிநாட்டு டாலர்கள் இருந்தன. இப்பணியில் ஐயப்ப சேவா சங்கத்தினர் ஈடுபட்டனர். கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, உதவி அதிகாரி ராமசாமி, தக்கார் பிரதிநிதி நல்லதம்பி மற்றும் கண்காணிப்பாளர்கள் உடனிருந்தனர்.