சென்னையில் தமிழ் கல்வெட்டு பயிலரங்கம்
ADDED :2242 days ago
சென்னை : தி.நகர், ராமகிருஷ்ணா பள்ளியில், தமிழ் கல்வெட்டு பயிலரங்கம், 25ல் துவங்குகிறது.
சென்னை, தி.நகர், பர்கிட் சாலையில் உள்ள, ராமகிருஷ்ணா பள்ளியில், ’ரீச் பவுண்டேஷன்’ சார்பில், தமிழ் கல்வெட்டுகள் தொடர்பான பயிலரங்கம் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. அவை, வரும், 25ம் தேதி துவங்குகின்றன. தொடர்ந்து, வாரம்தோறும், ஞாயிற்று கிழமைகளில், காலை, 8:30 மணி முதல், 11:00 மணி வரை, பயிலரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெறும்.அதில் பங்கேற்க, 3,000 ரூபாய் கட்டணம். இது தொடர்பான, கூடுதல் விபரங்களை, எம்.ராமநாத் - 9566133365; பி.ராமன் - 98841 15970; கிருஷ்ணகுமார் - 98408 30997 ஆகியோரிடம் தெரிந்து கொள்ளலாம்.