தட்டாஞ்சாவடி காளியம்மன் ஆடி மாத விழா
ADDED :2242 days ago
பண்ருட்டி: பண்ருட்டி தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்சவ விழாவையொட்டி, ஏராளமான பெண்கள் பங்கேற்ற பால் குட ஊர்வலம் நடந்தது.
பண்ருட்டி, தட்டாஞ்சாவடி காளியம்மன் கோவிலில் ஆடிமாத பிரம்மோற்சவ திருவிழா கடந்த15ம் தேதி துவங்கியது.விழாவையொட்டி தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.நேற்று (21ம் தேதி) பவுர்ணமி இளைஞர் குழு சார்பில் பால் குட ஊர்வலம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். பகல் 10:00 மணிக்கு சிறப்பு பால் அபிஷேகம், பகல் 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. செடல் மற்றும் தேர் திருவிழா வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது.